Ponni Archive · A Kothai project

பொன்னி களஞ்சியம்

1947–1955 வரையிலான தமிழ் கலை இலக்கிய இதழ். The Tamil art and literary magazine, 1947–1955.

Explore the archive

பொன்னி இதழ்களைத் தேடிப் படியுங்கள்

Search and read the Ponni magazine, 1947–1955, in the Ponni Archive.

பொன்னி இதழ்

The Ponni magazine

தொடக்கம் · 1947

பிப்ரவரி 1947-இல் தொடங்கப்பெற்றது

பொன்னி இதழ் திரு. அரு. பெரியண்ணன் மற்றும் திரு. முருகு. சுப்பிரமணியம் ஆகியோரால் 1947ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பெற்றது.

தொடங்கப்பட்ட முதல் வருடத்தில் மாதம் ஓர் இதழ் என வெளிவந்த பொன்னி 1948 முதல் மாதம் ஈரிதழாக வெளிவந்தது.

கொள்கை

பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம்

திராவிட இதழ்களின் வரிசையில் வைத்து போற்றத்தக்க பெரிதும் அறியப்படாத இதழாகப் பொன்னி இதழ் திகழ்கிறது. பகுத்தறிவு, சுயமரியாதை, சமத்துவம் ஆகியவற்றை மிகத் தீவிரமாக எடுத்துரைக்கும் இதழாக இவ்விதழ் வெளிவந்தது.

தமிழ்ச் சமூகத்தை அறிவுச் சமூகமாக்கும் முன்னெடுப்பில் பொன்னி இதழின் பணி தலையாயதாகும்.

— கவியரசு கண்ணதாசன்

‘திராவிடர் கழகத்தை ஆதரிக்கும் ஏடுகள் மிகக் குறைவாக இருந்த காலம். அவையும் அழகில்லாமல், அச்சுப்பிழை மிகுந்து வெளிவந்தன. அந்த நேரத்தில் வண்ண முகப்பு அட்டை போட்டு அழகாக நடந்த இதழ் ‘பொன்னி’ தான்.’

பொன்னியில் எழுதியவர்கள்

Who wrote in Ponni

ஆளுமைகள்

முதன்மையான இலக்கிய, அரசியல் ஆளுமைகள்

தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான கவிஞர் பாரதிதாசன் அவரின் ‘குயில்’ இதழ் அரசால் தடை செய்யப்பட்ட பிறகு பொன்னியில் எழுதினார். அவரின் கொள்கைகளையும் நடையையும் பின்பற்றி எழுதியவர்களை ‘பாரதிதாசன் பரம்பரை கவிஞர்கள்’ என்று அறிமுகப்படுத்தியது பொன்னி இதழ்.

தந்தை பெரியார்பேரறிஞர் அண்ணாபாவேந்தர்திரு.வி.க.கலைஞர் மு. கருணாநிதிகா. அப்பாதுரையார்கவியரசு கண்ணதாசன்டி. கே. சீனிவாசன்மு. வ.மு. அண்ணாமலைகவிஞர் வாணிதாசன்கவிஞர் சுரதா

இதழில் என்ன இருக்கிறது

What's inside

வகைமைகள்

இலக்கிய வகைமைகள்

இது மட்டுமன்றி அட்டைப்படக் குறிப்பு, மகளிர் அழகுக் குறிப்புகள், குழந்தை வளர்ப்புமுறை, பொன்னி வாழ்த்துகள், விகடங்கள், சிறுவர் அரங்கம் (சிறுவர் இலக்கியம்) போன்ற படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

கவிதைகள்சிறுகதைகள்தொடர்கதைகள்நொடிக் கதைகள்நாடகங்கள்பொதுக் கட்டுரைகள்ஆய்வுக் கட்டுரைகள்ஒப்பாய்வுக் கட்டுரைகள்தொடர் கட்டுரைகள்செய்திப் பாட்டு
கருப்பொருள்கள்

திராவிடச் சிந்தனைகள்

இவ்விதழில் மாநில சுயாட்சி, இந்தித் திணிப்பு, தனித்தமிழ் பற்று, விடுதலை, அரசியல், சமூகம் சார்ந்த திராவிடச் சிந்தனைகள் கட்டுரைகளாக, கதைகளாக, கவிதைகளாக, திறனாய்வுகளாக, துணுக்குகளாக வெளிவந்தன.

பாரசீகம், ரஷ்ய, கன்னடம், உருது, வடமொழி, தெலுங்கு போன்ற உலக இலக்கியங்களையும் பொன்னியில் அறிமுகம் செய்துள்ளனர்.

ஏன் இந்தக் களஞ்சியம்

1947–1955 தமிழகத்தின் காலக் கண்ணாடி

1947 முதல் 1955 வரையிலான தமிழகத்தின் காலக் கண்ணாடியாகப் பொன்னி இதழ் விளங்குகிறது. தொடக்க காலத் திராவிடக் கருத்தியல்களையும், அவை பரப்பப்பெற்ற வடிவங்களையும் முறைகளையும் ஆயும் ஆய்வாளர்களுக்கு மிகச் சிறந்த களமாகப் பொன்னி இதழ்கள் அமையும்.

1947க்கு பிறகான எழுத்துருக்கள், சிந்தனைகள், உரிமை முழக்கங்கள், கேலிச் சித்திரங்கள், நூலறிமுகங்கள் போன்றவற்றை அறியவும், அவற்றை ஆய்வுக்குட்படுத்தவும் பெரும் வாய்ப்பை பொன்னி இதழ்கள் ஏற்படுத்திக் கொடுக்கும்.

பொன்னி களஞ்சியம்

பொன்னி இதழ்களைத் தேடிப் படியுங்கள்

Explore the Ponni magazine archive, 1947–1955.