கையெழுத்து மாதிரி ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்ய முடியும். குழப்பமோ தடுமாற்றமோ தேவையில்லை!
செயலியை பதிவிறக்கம் செய்து அமைப்புகளில் (Settings) செயல்படுத்தி (enable) உடனடியாகப் பயன்படுத்தலாம்.
விசைப்பலகையின் சொற்கள் பரிந்துரையால் தட்டச்சு செய்யும் வேகம் கூடும். பட எழுத்துருக்கள் - ஈமோஜி (Emoji) வழியாக உங்கள் உணர்வுகளை மேலும் சுலபமாக வெளிப்படுத்த முடியும்
விசைப்பலகையில் உள்ள 45 விசைகளில் உயிர், மெய், உயிர்மெய், சிறப்பு எழுத்துக்கள், ( ஃ , ஸ்ரீ ) வடமொழி எழுத்துக்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழ் எழுத்துக்களும் ஒரே நேரத்தில் உங்கள் பார்வையில்!
எல்லா செயலிகளிலும் சாதனங்களிலும் பயன்படுத்தும் வகையில் தடையற்ற தட்டச்சு அனுபவம்!
சுலபமான முறையில் நீங்கள் பேசும் வாக்கியங்களை எழுத்துருவாக்க குரல்வழி-தட்டச்சு வசதி!
விசைப்பலகையின் முகப்பை வெளிர் (light) அல்லது நிழல் (Dark) என்று எளிதில் ஒரே சொடுக்கில் மாற்ற முடியும்.
ஆம். கோதை கடவுச்சொல் (password, OTP), வங்கி அட்டை விவரங்கள் (card info) போன்ற தனிப்பட்ட தரவுகளை சேகரிக்காது. நீங்கள் தட்டச்சு செய்யும் தரவுகளை Server எதற்கும் அனுப்பாமல் சாதனத்திலேயே இயங்கும். இதன்மூலமாக உங்கள் தரவுகளின் பாதுகாப்பு (Data Privacy and security) உறுதிசெய்யப்படுகிறது.
Android பயனர்கள் Google Play Store வழியாகவும் iOS பயனர்கள் Apple App Store வழியாகவும் கோதை விசைப்பலகையை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.