இலக்கியல் நோக்கு:
கணினி உலகில், பிறமொழியை சாராமல் தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி தமிழில் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்க தீர்வு காணுதல்.
ஏன்?:
தொழில்நுட்பத்தில் தமிழ் பயன்பாடு அதிகரித்தால் தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும்.
பிரச்சனை அறிக்கை :
பலர் ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி தமிழில் (Phonetics Transliteration) எழுதுகின்றனர். ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தி தமிழ் எழுதும் போக்குக்கு வந்த பிறகு தொழில்நுட்பத்திலும், சமூக வலைதளங்களிலும் தமிழ் மொழியின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்த தாக்கம் தற்போது உள்ள அரசு திட்டங்கள் மற்றும் விளம்பரங்களிலும் கூட தமிழை தமிழ் எழுதுக்கள் அல்லாமல் ஆங்கில எழுத்துக்களை வைத்து எழுதுகிறார்கள். எடுத்துக்காட்டாக “இது எங்கள் ஊர்” என்பதை “ithu engal oor” என்றும், “ithu engal area” என்றும் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுதும் பழக்கங்கள் உருவாகி வருவதை நாம் காணலாம்.
அரசு அலுவலகங்களிலும் தொழில்முறை எழுத்தாளர்களும் தமிழில் எழுத போதிய கருவி இல்லாமல் மூன்றாம் தரப்பு மென்பொருள் பயன்படுத்தி அல்லது ஆங்கிலம் (phonetics) பயன்படுத்தி எழுதும் நிலை உள்ளது.
தட்டச்சுக் கருவி (typewriter) பயன்பாடு குறைந்த பிறகு, தமிழில் தட்டச்சு செய்வதற்கான நிலையான வடிவமைப்பு (layout) இல்லை.
Tamil99, Bamini, Senthamizh, Phonetics, New Typewriter, Old Typewriter போன்று பல்வேறு தட்டச்சு முறைகள் மற்றும் வடிவமைப்பு (layout) இருந்தாலும் அது பயனர் இடையே பெரும் குழப்பங்கள் உருவாக்கி தமிழ் மொழி பயன்பாட்டை கணிசமாக குறைக்கின்றது.
ஆங்கில மொழியில் எழுத்து வடிவில் தட்டச்சு பயன்பாடு உள்ளது. ஆனால் தமிழ் மொழியில் ஒலி வடிவில் அதாவது “கோ” என்ற எழுத்து எழுத “க” வரிசை பயன்படுத்தப்படுகிறது. தமிழில் எழுத்து வடிவில் தட்டச்சு செய்ய போதிய வடிவமைப்புகளோ கருவிகளோ இல்லை.
“கே” போன்ற எழுத்துக்களுக்கு இரண்டு வளைவுகள் உள்ளன, அவை இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றன. ஆனால் மற்ற தமிழ் விசைப்பலகைகளில் “கே” “ரோ” போன்ற எழுத்துக்கள் ஒரே எழுத்தாகவே கருதப்படுகிறது. இதனால் ஒரு எழுத்தை எழுத அந்த எழுத்தின் ஒலி வரிசையை அறிந்து தகுந்த வரிசை வைத்து எழுதுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூகுள் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்திய மொழிகள் மற்றும் விசைப்பலகைகளைப் பயன்படுத்தும் போது ஒலிப்பு ஒலிபெயர்ப்பில் (Phonetic Transliteration) மக்கள் சார்ந்திருப்பதை மூலதனமாக்குகிறது.
பணி நோக்கம் :
ஆங்கிலத்திற்கான QWERTY வடிவமைப்பு போலவே தமிழ் மொழிக்கும் எளிமையான மற்றும் உலகளாவிய வடிவமைப்பு (Layout) உருவாக்குதல்.
ஆங்கிலத்தை வைத்து தமிழை எழுதுபவர்களை (Phonetic Transliteration) (எ.கா அம்மா என்ற வார்த்தையை amma என்று எழுதுகிறார்கள்) எல்லாம் மீண்டும் தமிழில் எழுத வைக்கும் முயற்சி.
தற்போதைய செயல்கள் :
தற்போது உள்ள தமிழ் எழுத்துக்கருவிகள், வடிவமைப்புகள் என்னவென்று ஆராய்ந்து, அதில் இருக்கும் இன்னல்கள் மற்றும் சிரமங்களை சரி செய்ய உலகளாவிய மற்றும் எளிமையான அமைப்பை உருவாக்க வலை பயன்பாட்டிற்கு தகுந்த அமைப்பை (layout) வடிவமைப்பு செய்தோம். வலை பயன்பாட்டின் வடிவமைப்பு.
வடிவமைப்பு (layout) வடிவமைத்து முடித்தப் பிறகு, நாங்கள் அதை வலை பயன்பாட்டிற்கு தகுந்த வகையில் HTML, CSS மற்றும் JavaScript பயன்படுத்தி செயலியாக உருவாக்கினோம். – தமிழ் விசைப்பலகை வலை செயலி
ஒலி பயன்படுத்தாமல் எழுத்துக்களை மையப்படுத்தி காகிதத்தில் அல்லது கைகளை பயன்படுத்தி எழுதும் முறையில் தொழில்நுட்ப மாற்றம் கொண்டு வருவது சவாலாக இருந்தது.
அதிக அளவிலான பயனர்களுடன் பயன்பாட்டு நிகழ்வுகளை சரிபார்க்கவும் நாங்கள் வடிவமைத்த வடிவமைப்பு எளிதான முறையில் தமிழை எழுத பயன்படுமா என்று கண்டறிய கைபேசி செயலியாக இதை மாற்ற முடிவு செய்தோம்.
எனவே மேலேயுள்ள வலைப்பதிவு வடிவமைப்பை மொபைல் செயலியாக செய்ய முடிவு செய்து மொபைல் செயலிக்கான வடிவமைப்பு செய்தோம். மொபைல் செயலி வடிவமைப்பு I மற்றும் மொபைல் செயலி வடிவமைப்பு II
கைப்பேசி தரவு மொழிகளை பயன்படுத்தி இப்பொழுது கைப்பேசி செயலியாக இதை நாங்கள் உருவாக்கி உள்ளோம். மொபைல் செயலி ரெப்போஸிட்டரி